கவிதைகளைப் படிக்கத் தெரிந்த பின்னர், அது மாதிரியே ஒன்றை எழுதிட நினைத்தேன். எளிமையாகப் புரியப்படக்கூடிய எழுத்துக்கள் என்னுள் ஏற்படுத்திய நிகழ்வே என்னால் எழுதப்படுவை. கதை படிக்கும்போது கதை மாந்தராக மாறுவது போலவே, கவிதைகள் என்னுள் ஆழப்பதிந்து மனதை ஆக்கிரமிக்கும். கதையோ, கவிதையோ ஏற்படுத்தும் அந்தப் பதிவுகள் மீண்டும் வேறுமுறையில் மறுபிறப்பாக முடிந்தவரை இயல்பாகவும், எளிமையாகவும் என் எழுத்துக்களில் தோன்றும்.