படித்து முடித்தும் மனப்பிறழ்வு ஏற்பட்டதுபோல் ஓரு உணர்வு நீங்கள் முன்னுரையில் சொன்னதுபோல்.
மீண்டு் வந்தபின்னர், நிறையக் கிறுக்குத்தனங்களைக் கண்ணுத் தெரியாமல் பதிவாகி விடும் என்ற எண்ணத்தில் பதுக்கப்படுகின்றதோ எனத் தோன்றுகின்றது.
இன்று சின்னச் சின்னதாய் நடப்பவைகூட, கிறுக்கு ராஜாக்கள் படிக்கும்போது நினைவுறுத்துகின்றது.
குறிப்பாகப் பழிவாங்குதல், பதவிவெறி, பங்காளி சண்டை, பெண்ணாசை, பொன்னாசை, பெண்ணடிமை, கற்பழிப்பு, துரோகம், சர்வாதிகாரம், வாரிசுச் சண்டை, ஆன்மீகம், ஆணவம், அடிமைப்படுத்துதல், வஞ்சம், சூழ்ச்சி, சாணக்கியத்தனம், மக்களின் அவலநிலை, கூலிப்படைகள், ஆடம்பர வாழ்வு, மக்கள் வரிப்பண ஏய்ப்பு இப்படிப் பல செய்திகளில் பாதியாவது இன்றும் ஆங்காங்கே தொடர்கின்றது.
ஆகச் சிறந்த கிறுக்குத்தனங்களைத் தொகுத்தளித்துப் பயங்கரங்களைச் சொல்லும் உண்மைகளைப் படித்தவுடன், இனி நாட்டில் என்ன நடந்தாலும் “ககபோ” எனச் சொல்லிட்டு் நகர்ந்து விடலாம் என்ற தைரியம் வருகின்றது.
மிரட்டல் கதைகள்; விரட்டும் கனவுகள்.
தொடர்ந்து உங்கள் படைப்புகள் புதுமையைச் சொல்வது சிறப்பு. வாழ்த்துகள் முகில்.
–சித்ரா மகேஷ்