மகளிர் நாள் என்பது
ஒரு நாள் கொண்டாட்டமல்ல
ஒவ்வொரு நாளும் போற்றிக்
கொண்டாட வேண்டியது.
உறுதியும், ஆற்றலும் நிறைந்து
உருவமாய் நிற்பவள்.
நாடோ, வீடோ நம்பிக்கையால்
ஒளி பெறச் செய்பவள்.
தாயாய், சகோதரியாய், மனைவியாய்
மகளாய், மருமகளாய், மாமியாராய்,
பாட்டியாய், பேத்தியாய், தோழியாய்
தனித்திறன் கொண்ட தலைவியாய்,
உறவுகள் போற்றும் பெருந்தக்கவள்
என்னென்ன பெயரில் வந்தாலும்
உறுதி கொண்ட நெஞ்சினளாய்
நேர் கொண்ட பார்வையோடு
நிமிர் நடை கொண்ட…
அத்தனை பெண்களுக்கும்
மகளிர் நாள் வாழ்த்துகள் 🎊
வாழ்வோம்… வாழ்விப்போம்…
– தமிழ்க்காரி
நன்றி : ட்ராட்ஸ்கி மருது