எனக்குத் தேவை ” respect and happiness” என்ற சொற்களைக் கேடகும் வரை, எனக்கும் ஒரு அடி தானே. ஒருமுறை விட்டுவிடலாம். அவன் தான் வந்து பேசுனானே என்று தோன்றிக் கொண்டே இருந்தது. விட்டுக் கொடுத்தே வாழ்ந்த கிராமத்துப் பெண்கள் வளர்த்து, அச்சமூகத்தோடே வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் வேறெப்படியும் எனை மாற்ற முடியவில்லை.
ஆனால் என் 13 வயது மகளின் பார்வை வேறாக இருந்தது. அவள் படமத்தினூடே சொன்ன சின்னச் சின்ன கருத்துக்கள் பெண் ஏன் அடிமையானாள் படிச்சதிலிருந்தவற்றை நினைவுபடுத்தியது.இதைவிடக் கொடுமைகள் தாங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் இந்தப்படம் பாரத்தால் பெரியார் கனவு கண்ட பெண்விடுதலை நடந்தே தீரும்.
ஆண்களை எதிர்ப்பதோ, அவர்களைப் போலவே போலச் செய்தலோ பெண்ணியம் இல்லை என்பதை அழகுறச் சொல்கின்றது இப்படம்.Mutual respect என்பதும், மகிழ்ச்சியும் இருந்தாலே வாழ்வு சிறக்கும் என்பதைப் பலவிதமாகப் பெண்களின் வாழ்க்கைமுறையில் காட்சிப்படுத்தியுள்ளது தனிச் சிறப்பு.
வேலைக்காரப் பெண்ணாக வருபவர் தன்னுடைய ஊதியத்தை விட அதிகமாகத் தந்த பணத்தைத் திருப்பி வைப்பது தன்மானம்.வழக்குரைஞராக வந்தவர் இன்னும் உள்ளத்தில் நிற்கிறார்.ஆண் துணை இல்லாமல் பெண் வாழவே முடியாது, குழந்தையை வளர்க்க முடியாது எனும் காலங்காலமாகச் சொல்லப்பட்டதற்கும் பதி்ல் தருகின்றது இந்தப்படம்.
அடிக்க நினைப்பதே தவறு எனப் புரிந்து கொள்ளச் செய்யும் கதை.இறுதியில் நான் புரிந்து கொண்டது,பெண் திண்மையானவள் என்றும்.
– சித்ரா மகேஷ்