Connect with us

Hi, what are you looking for?

கட்டுரைகள்

தேவரடியார் – கலையே வாழ்வாக…

கவிஞர். அ.வெண்ணிலா அவர்களின் தேவரடியார், கலையே வாழ்வாக என்ற ஆய்வு நூல் போற்றப்பட வேண்டிய வரலாற்றுப் பதிவு. ஆய்வு நூல்களைப் படிப்பதற்குரிய முன்னேற்பாடுகளோடு மிகக் கவனமாகவே படிக்கத் தொடங்கினேன். கலையே வாழ்வாக வாழ்ந்த பெண்களின் வாழ்வை அறிந்து கொள்ளும் ஆசையும், வேகமும் விரைந்து படிக்குமடிச் செய்தவை.

முதல் இரண்டு பகுதிகள் தேவரடியார் முறை தோன்றிய பின்னனி, அதற்கான சான்றுகள் அதை நிறுவக்கூடிய தரவுகள், தேவரடியார் வாழ்க்கை, கடமைககள், தேவரடியார் முறையில் இருந்த முரண்பாடுகள், இம்முறைக்கு எதிரான பகுத்தறிவு இயக்கத்தின் போராட்டங்கள் போன்ற செய்திகளோடு ஆய்வு நூலுக்கே உரிய அறிமுகத் தன்மையோடு நூலுக்குள் நம்விரல் பிடித்து அழைத்துச் செல்கின்றது.

மூன்றாம் பகுதியில், ஆய்வின் உழைப்பிற்காக தேடுதலும், தேடியவற்றை முறைப்படுத்தியமையும் சிறப்பான உள்தலைப்புகளோடு அமைப்பட்டுள்ளது. கல்விமுறை பற்றிச் சொல்லும்போது அவர்களின் கல்விநிலை, கல்வி அமைப்புகள், திண்ணைப்பள்ளிகள், சமண, பெளத்த கல்வி நிலையங்கள், கடிகைகள்,சாலைகள், ஐரோப்பியர் உண்டாக்கிய கல்வி, தேவரடியார் கல்வி வரலாறு, கல்வி கற்பித்தோர், ஆடலாசிரியர், இசையாசிரியன், முத்தமிழ்ப் புலவன், தண்ணுமையாசிரியன், யாழ்ப்புலவன், நட்டுவர், தலைக்கோலி, கூத்தர், பாடலாசான்கள், பாணர்கள், கற்பிக்கப்பட்டவை, கூத்துகள், நாடகங்கள் ஆகியவற்றை முழுமையான தகவல்களைத் திரட்டித் தொகுத்துத் தகவல்களாக மட்டும் இல்லாது படிப்பவர் உள்வாங்கி உணர்ந்து கொள்ளும்படியான எழுத்துமுறையைக் கையாண்டிருக்கிறார்.

முடிவாகத் தந்துள்ளவற்றில் சில மனதின் ஆழத்தில் நீங்காது நிற்பவை

1. தேவதாசிகள் ஒரு தனித்த சாதியைச் சார்ந்த பெண்கள் அல்ல என்ற சொல்லப்படுவது இந்தமுறையிலும் விதிவிலக்கின்றிப் பெண்கள் நடத்தப்பட்டிருக்கின்றனர் என்பது தெளிவுறுகிறது.

2. தேவரடியார் முறை உலகம் முழுவதும் இருந்த அமைப்பு என்ற உறுதிப்படுத்தப்பட்ட தகவல் அரியது.

3. தேவரடியார் பெண்களின் வழியாகத் தமிழக நுண்கலைகள் வளர்ந்தன என்பதன் வழி இன்று நமக்காக

Advertisement. Scroll to continue reading.

கற்றுக் கொள்ளவும், பார்த்து மகிழவும் இருக்கின்ற கலைகளுக்காக அவர்களுக்கு நன்றி சொல்லியே தீர வேண்டும்.

தடம் பதித்த தேவரடியார்கள்:

இந்தப் பகுதியில் ஆளுமைத் திறனால் உயர்நிலை அடைந்த தேவரடியார்ப் பெண்களின் சமூகப் பங்களிப்பினை அறிய முடிகின்றது. தடம்பதித்த என்பது காலம் கடந்தும் வரலாற்றில் நிலைத்திருக்கும் தேவரடியார்ப் பெண்களைக் குறிக்கின்றது. இறைவனுக்கான தங்கள் சேவைகளை முடித்துவிட்டுச் சமூக சேவைகளும் செய்துள்ளனர். அப்படிச் செய்து இன்றைய சாதனைப் பெண்களுக்கு முன்னோடியாக இருந்த பெண்களின் வாழ்வும், வாழ்க்கைச் செய்தியும் வணக்கத்திற்குரியவை. அவர்களைப் பற்றி இந்த நூலில். அ.வெண்ணிலா பதிவு செய்துள்ளவர்களும், அவர்கள் பற்றிய சிறு குறிப்புகளும் மட்டுமே எழுதுகிறேன். நூலை அனைவரும் முழுமையாகப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே இந்தப் பதிவு. இருப்பினும் கீழே நான் குறிப்பிட்டுள்ள பெண்களைப் பற்றிக் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். படித்தால், தேவரடியார்கள் குறித்த விமர்சனமும், வேறுபட்ட எண்ணமும் மாறுபடும். பெண் முன்னேற்றத்தின் முன்னோடிகள் தேவரடியார் பெண்களே என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.

பரவை நங்கை: அரசனின் அணுக்கி- தனிப்பட்ட சேவையாள் – உயர்ந்த மரியாதையும், புகழும் பெற்றவர். இராஜேந்திரச்சோழன் தனக்கு இணையாக அமர வைத்து அவளது சேவையை அங்கீகாரம் செய்தான்.

பெங்களூரு நாகரத்தினம்மாள்: தன்னம்பிக்கையும், உறுதியும் மிக்கவர்.தியாகராசருக்குக் கோயில் கட்டியவர், தேவரடியார் மரபில் வந்தாலும் எந்தக் கோயிலுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர் அல்ல. மேலும் தேவரடியார் மரபு பற்றிப் பெருமையாகவும், தான் எந்த ஆண் கவிக்கும் குறைந்தவள் இல்லை என்ற செய்திகள் கொண்ட முத்துபழனி எழுதிய நூலிற்கு எழுந்த தடையை நீக்கி, அதை வெளியிட்டார்.

வீணை தனம்மாள்: கண்ணியமும்,கம்பீரமும் நிறைந்த ஆளுமைத்திறன் கொண்டவர். இசைப் பரம்பரையச் சேர்ந்தவர். தேவரடியார்கள் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டனர். அப்பெண்களின் கலைகள் புறக்கணிக்கப்பட்டது. அவர்கள் இழந்த மரியாதையை மீட்டுத் தர முயற்சித்தார்.

சதிராட்டம் என்று கொச்சயான ஆட்டமாக மாற்றப்பட்டிருந்த அற்புதக் கலையை இவர் பேத்தி பால சரஸ்வதி உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தார். சதிராக இருந்தது பரநாட்டியமாக இருக்கும் கலையை நிலைப்படுத்தியது இவரது குடும்பத்தினரே.

பால சரஸ்வதி: பரதக் கலையைக் குறித்து எழுத நினைத்தால் பால சரஸ்வதியைப் பற்றி எழுதினால் போதும்.

பாலாமணி அம்மாள்: நாடகக் குழுவினை நடத்தியவர். பாலாமணி நாடகக் கொட்டகை- பெண்கள் மட்டுமே நடத்தியது. 100 பெண்கலைஞர்கள் இருந்தனர். முதல் சமூக நாடகமான டம்பாச்சாரி விலாசம் என்ற நாடகத்தை மேடையேற்றியவர். இவர் நாடகத்தைக் காண வசதியாக ஆங்கில அரசு “பாலாமணி ஸ்பெசல்” என்ற சிறப்பு ரயில் ஒன்றை ஏற்பாட்டைச் செய்தது.

Advertisement. Scroll to continue reading.

கமலாம்பிகை சபா: கமலவேணி அவரது பெயர்.இலங்கைக்குச் சென்று நாடகம் நடத்தியவர்.

கே.பி. சுந்தராம்பாள்: நல்ல தங்காளின் மூத்த மகளாக நாடகத்தில் நடித்துள்ளார். ஸ்ரீகான சபா நடத்தியவர்.

அரசியல் ஈடுபாடு கொண்டு காங்கிரஸ் முன்னெடுத்த சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர். ஒரு படத்திற்கு ஒரு இலட்சம் சம்பளமாகப் பெற்ற முதல் நடிகர் இவர்தான்.

டி.ஆர்,ராஜகுமாரி: ஆங்கில மொழிப் படத்தில் நடித்த முதல் நடிகை இவர்.

மதுரை சண்முகவடிவு: HMV என்ற பிரபல இசைத்தட்டு நிறுவனம் “ட்வின் ரெக்கார்ட்ஸ்” என்ற பெயரில் மலிவு விலையில் இசைத்தட்டுக்களை வெளியிட்டனர். இவரின் மகளே எம்.எஸ். சுப்புலட்சுமி.

எஸ். அம்புஜம்மாள், எம்.ஆர். சந்தானலட்சுமி, ராதா கல்யாணம், என்.சி. வசந்த கோகிலம், எம்.எல். வசந்தகுமாரி ஆகியோர் புகழ்பெற்ற தேவரடியார் பெண்கள்.

இப்படித் தேவரடியார் பெண்கள் வளர்த்த கலை மரபே இன்று தமிழ்க்கலை மரபாக பின்பற்றப்படுகின்றது. சங்க காலத்தில் இருந்த பாடினி, விறலியர் வழியாக இசை நாட்டியக் கலைகள் இப்பெண்கள் வழியாக இன்றுவரை கொண்டு சேர்த்த பெருமை இவர்களையே சேரும். இப்படிப் பெண் முன்னேற்றம், கலைத்திறன், சமூக சேவை, ஆளுமைத்திறன், உள்ள உறுதி எனத் தனித்த்னமைகளொடும், தனித்திறமையோடும் அன்றைய தேவரடியார்ப் பெண்கள் இருந்துள்ளனர் என்பதைத் தரவுகளோடு தலைநிமிர்ந்த தமிழச்சிகளைத் தன் ஆய்வின் வழி பெருமைப்படுத்தி உள்ளார் அ. வெண்ணிலா.

இந்தத் தேவரடியார் முறை ஏன் தோன்றியது? எதற்காக இப்படி ஒருமுறை? என்று நொந்து கொள்ளாமல் இருக்க முடியாது. ஆறுதல் தருவது, இம்முறையினால் பெண்கள் பெற்றதும், கற்றதும் கலைகள் என்பதே. இழப்பு ,துன்பம், போராட்டம் ஆகியவற்றைத் தாண்டி வாழ்வை கலைகளால் நிரப்பியவர்கள் என்பது இந்நூல் உணர்த்துகின்றது. அத்தனையும் தாண்டி, உறுதி, உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி என இடையூறாக ஏற்பட்ட தடைகளை உடைத்துத் தனித்தன்மையால் கலைகளுக்கு நீள் ஆயுளைத் தந்தவர்கள், கலையே வாழ்வாக வாழ்ந்த தேவரடியார் பெண்கள். இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் கலைகளின் கண்கள்.

– தமிழ்க்காரி

Advertisement. Scroll to continue reading.

Advertisement

Trending

சங்க இலக்கியம்

திருக்குறள்

You May Also Like

கவிதைகள்

அம்மா வெறும் சொல்லல்ல. நாள்களில் என்ன இருக்கின்றதுஅம்மாவைக் கொண்டாட. எந்நாளும் தன்னலம் பார்க்காததிண்மையின் […]

சங்க இலக்கியம்

   ‘சங்கம் மொழிந்த காதல்’ –   காதல் 2 உலகில் யாருக்கெல்லாம் கொடுத்து […]

திருக்குறள்

மதியாதவர் உதவியில் உயிர் வாழ்வதைவிட இறப்பதே நன்று. தன்னை மரியாதை இல்லாமல் நடத்துபவர் […]

சங்க இலக்கியம்

‘சங்கம் மொழிந்த காதல்’ – காதல் 3 சுற்றியிருக்கும் உறவுகளோடுதான் மனிதவாழ்வின் அன்றாட […]

சங்க இலக்கியம்

நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறுஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்கற்று அறிந்தார் ஏத்தும் கலியொடு […]

சங்க இலக்கியம்

‘சங்கம் மொழிந்த காதல்’ –   காதல் 1 நீண்டவழிப் பயணத்திற்காக வழி நெடுகச் […]

திருக்குறள்

கனவிலும் துன்பம் தரும்சொல் வேறு செயல் வேறுஉடையவர் நட்பு. கனவில் கூடத் துன்பம் […]

திருக்குறள்

கேலி பேச வேண்டாம் தோற்றம் குறை அல்ல தேரின் அச்சாணி சிறிது. பெரிய […]

சங்க இலக்கியம்

‘சங்கம் மொழிந்த காதல்’ – காதல் 5 மனிதனின் கண்டுபிடிப்புகளில் சிறந்த ஒன்று […]

Advertisement