பெண் பேரரசி என்பதனாலேயே வரலாற்றில் மாற்றம் செய்யப்பட்டது அவள் ஆற்றலும், ஆட்சித் திறமையும். பெண் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள ஆண்களோடும், சமூகத்தில் உள்ள சகபெண்கள் உள்பட அனைவருடனும் நடத்தும் போராட்டங்கள் இப்படித்தான் மாற்றம் செய்யப்படுகின்றது.
அன்று வூவுக்கு நடந்தது வேறுவேறு வடிவங்களில் பெண்களைக் குறி வைத்துத் துரத்திக் கொண்டுதான் இருக்கின்றது. வூவைப் போன்று நிர்வாகத்தில் கில்லாடியாகவும், தன் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள “கில்லர்” லேடியாகவும் நடந்து கொண்டவர்கள் வாழ்வு வரலாறாகிறது. அப்படி இல்லாதவர்கள் வாழ்வு காணாமல் போகிறது.
எப்படிப் பெண் வாழ்ந்தாலும், உலகம் பார்க்கும் பார்வையில்தான் இருக்கின்றது அவள் பற்றிய மதிப்பீடு.
மாற்றங்களோடு வாழும் வாழ்வில் வூ ஸெடியானின் கில்லாடிப் பகுதி நல்ல பாடம். கில்லர் லேடி – வேண்டாமே…நன்றி ”கிறுக்கு ராஜாக்களின் கதை”
-சித்ரா மகேஷ்