கவிக்கோ எனும் சொல் இவருக்குப் பொருந்தியதில் அச்சொல்லுக்குத்தான் பெருமை. தமிழில் இவர் ஆளுமையை, ஆழ்ந்த அறிவினை இரண்டு நாள்களாகத் திரும்பத் திரும்பக் கேட்டும் சலிக்கவில்லை.
ஒரு குறளுக்குப் பலரின் உரைகள் படித்த பின்னும் கவிக்கோ அவர்களின் மூன்று உரைகளில் மூன்றுமே பொருந்திப் போவது
தனிச்சிறப்பு.
இப்படி ஒரு ஆசிரியரிடம் தமிழ் கற்க முடியாத காலத்தில் பிறந்தமைக்கு …
என்ன சொல்ல
குறள்: 37
அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானோடு் ஊர்ந்தான் இடை.
அறத்தாறு- அறம் செய்கிற வழி
அறம் காட்டுகிற வழி
அறம் செல்லுகின்ற வழி
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் விளக்கம்:
1)பல்லக்கைச் சுமப்பவனுக்கும், அதில் உட்கார்ந்து வருபவனுக்கும் ஒரே அறத்தைச் சொல்லக்கூடாது.இருவரின் நிலையும் சமூகத்தில் ஒன்று அல்ல.
2) பல்லக்கைச் சுமப்பவன்,அதில் உட்கார்ந்து வருபவன் இருவருக்கும் அறத்தினால் கிடைக்கும் பயன் ஒன்றுதான்.
3) இதுதான் அறம் என்றும், அறம் செய்யும் வழி என்றும் குறிப்பாகச் சொல்லக்கூடாது. காலத்திற்கும், இடத்திற்கும் ஏற்ப அறம் மாறும்
-சித்ரா மகேஷ்