அன்பு வலிக்குதா?
அர்த்தம் பிறழுதா?
அமைதி இனிக்குதா?
சத்தம் இசைக்குதா? முத்தம் முறைக்குதா?
நிலா பிடிக்குதா?
நிழல் பேசுதா?
நிமிடங்கள் நிக்குதா? வார்த்தைகள் விக்குதா?
வலிகள் மறக்குதா?
பொழுது நீளுதா?
பொய்கள் நிறையுதா?
தூக்கம் அலையுதா?
தவிப்பு துளைக்குதா?
கவிதை மணக்குதா?
கனவில் மயங்குதா?
மழை மயக்குதா?
மாலை வதைக்குதா?
தலையணை அணைக்குதா?
தன்நிலை இழக்குதா?
கண்கள் ஓடுதா?
கண்டபின் நாணுதா?
ஞாபகம் தொலையுதா?
நாளைகள் ஏங்குதா?
நினைவுகள் பூக்குதா?
எண்ணங்கள் திக்குதா?
வண்ணங்கள் வளருதா?
கண்ணிமையும் கனக்குதா?
என்னென்னவோ தோணுதா?
ம்ம்ம்ம்ம்ம் அப்ப அதுதான்!
அதேதான் காதல்
-சித்ரா மகேஷ்