பசு கலைந்து போன பல்லாங்குழி விளையாட்டு
அறிவியல் நோட்டில் ஆசிரியர் கிழித்த
வரைந்த இதயம்
அறிவில் எட்டாமல் அதகளம் புரிந்த
பூகோளப் படம்
தொட்டு விளையாட்டில் துரத்தித் தொட
முடியாத தோழி
குச்சி ஐஸில் தடவிச் சிலிர்த்த
நாக்கின் சுகம்
தாவணி அக்காக்கள் கிசுகிசுத்த அந்தப்
பேருந்து நிலையம்
தண்ணீர் எடுக்க வந்து போர்க்களமாகும்
அதே குழாயடி
யார் வீட்டிலும் பசிக்கு உண்டு மகிழ்ந்த
சமத்துவ எதார்த்தம்
வயதான தாத்தாமுன் மறைந்து நிற்கும்
வயதாகாத அம்மா
இதுபோலவே இன்னுமின்னும் நிறைய நிறைய …. எதுவுமே வேண்டாம்.
சிட்டுக்குருவியோடு சில்லென்று ஓடித்திரிந்த
கலப்படமில்லா
அந்த நாட்களின் என் மனது தவிர!
– சித்ரா மகேஷ்
You May Also Like
கவிதைகள்
அம்மா வெறும் சொல்லல்ல. நாள்களில் என்ன இருக்கின்றதுஅம்மாவைக் கொண்டாட. எந்நாளும் தன்னலம் பார்க்காததிண்மையின் […]
சங்க இலக்கியம்
‘சங்கம் மொழிந்த காதல்’ – காதல் 2 உலகில் யாருக்கெல்லாம் கொடுத்து […]
திருக்குறள்
மதியாதவர் உதவியில் உயிர் வாழ்வதைவிட இறப்பதே நன்று. தன்னை மரியாதை இல்லாமல் நடத்துபவர் […]
சங்க இலக்கியம்
‘சங்கம் மொழிந்த காதல்’ – காதல் 3 சுற்றியிருக்கும் உறவுகளோடுதான் மனிதவாழ்வின் அன்றாட […]
சங்க இலக்கியம்
நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறுஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்கற்று அறிந்தார் ஏத்தும் கலியொடு […]
சங்க இலக்கியம்
‘சங்கம் மொழிந்த காதல்’ – காதல் 1 நீண்டவழிப் பயணத்திற்காக வழி நெடுகச் […]
திருக்குறள்
கனவிலும் துன்பம் தரும்சொல் வேறு செயல் வேறுஉடையவர் நட்பு. கனவில் கூடத் துன்பம் […]
சங்க இலக்கியம்
‘சங்கம் மொழிந்த காதல்’ – காதல் 5 மனிதனின் கண்டுபிடிப்புகளில் சிறந்த ஒன்று […]