வலி தந்த நாள்களின் நினைவுகளை
வழியனுப்ப ஒரு ஏற்பாடு
முகத்தைக் கட்டிய முகமூடி விளையாட்டு
தோல்வி பெற ஒரு புது நாள்
Positive என்ற விதி பெற்ற பொருள்முரண்
திருத்தப்பட வந்த நந்நாள்
வீடடைந்த நாள்கள் திறந்து பறந்திடச்
சிறகு சமைத்திடும் நாள்
உயிர் தின்றாடிய விழியிழந்த விதி
வழிமறந்து போகும் நாள்
மீட்க இயலா இழப்புகளை இனிவராது
தடுத்திடும் வரும்நாள்
எப்படியோ மீண்டு வந்தோமென்ற பெருமூச்சுடன் திரும்பிப் பார்க்காது
முன்நடை போடும் நாளிது…
காலம் புதிது புதியாய்க் கற்றுக்
கொடுக்கின்றது கணக்கின்றி…
நம்பிக்கை மட்டுமே வாழ்நிலையைத்
தக்க வைக்கும் அருமருந்தாய்
நிற்கின்றது உலகம் முழுமைக்கும்.
Advertisement. Scroll to continue reading.
புத்தாண்டு வாழ்த்துகள்.
– சித்ரா மகேஷ்