சுண்ணாம்புச் சுவத்துல
நீலக்கலர் தூக்கலா இருக்கப்
போட்டியிடும் வீடுகள் கிராமத்துல,
பக்கத்து வீட்ட எட்டிப்பாக்கும்
வாசல் நெறைக்கப் புள்ளி
வச்சுப் போட்டமாக்கோலம்,
கைதேயக் களையெடுத்த
கால்நோகக் கதிர் அறுத்த
களைப்புக் காணாமப் போகும்,
சுட்டெரிச்ச சூரியனக் கும்பிட்டு
படையல் போட்டு நன்றி சொல்லும்
உழவனோட நெறஞ்ச மனசு,
இராப்பகலா பாடுபட்ட பலனிது
இந்த நாளு மட்டுந்தான் உழவன்
உசுரோட ஆறுதல் பேசுது,
பச்சிரிசி பொங்கும் புதுப்பானை
பச்ச மொச்ச, கத்தரிக்காய் குழம்பு
காத்துக்குக் கூட எச்சியூறும்,
ஓடி ஓடி அலுத்துப் போன உடம்புக்கு
புது இரத்தம் பாச்சும் பொங்கச் சோறு
பொங்கட்டும், சுவை தங்கட்டும்,
உழவன் கொண்டாடும்
உழவனைக் கொண்டாடும்
நாள் சிறக்கட்டும் என்றென்றும்.
Advertisement. Scroll to continue reading.
அலகுடை நீழலவர் வாழ்வு
பொங்கட்டும் பொங்கட்டும்
பொங்கச் சோற்றின் சுவையோடு
– சித்ரா மகேஷ்
In this article:Featured, உழவர் திருநாள், தமிழர் திருநாள், தைப்பொங்கல், பொங்கல், விவசாயி, விவசாயி மகள்