அதீத நம்பிக்கையின்
ஆணிவேர்
இன்ப துன்பங்களின்
சரிநிகர்
இரட்டை உயிர்களின்
நீள்பயணம்
தனியே துடித்தாலும்
ஓரிதயம்
பேசாத கண்களில்
சொல்லாட
ஒரு சொல்லில்
இரு உயிராக
இழத்தல், தவித்தல்
பொதுவாக
அன்பும், அறனும்
இயல்பாக,
வாழ்வின் பக்கங்கள்
தேனூற
Advertisement. Scroll to continue reading.
மகிழ்வு விதைகள்
மரமாக
மரமாகி, பூப்பூக்க
காய்காத்து
காய்த்து, பழமாகி
வண்டாட
வண்டாட, நாள்கள்
கொண்டாட
இன்றும் ,என்றும்
என்றென்றும்
காதல் வாழ்க
காதலோடு
காதல் சுவைக்கும்
காதலர்களோடு
காதல் என்பது
நம்பிக்கை
– சித்ரா மகேஷ்
Advertisement. Scroll to continue reading.